பண்ருட்டி,

னக்கு தெரியாமல், தன்னிச்சையாக எனக்கு கழக மகளிர் அணி இணை செயலாளராக பொறுப்பு அறிவிப்பதா என டிடிவி தினகரனுக்கு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

தேர்தல் கமிஷனால் ஏற்றுக்கொள்ள படாத டிடிவி தினகரன் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் என்றும் கூறி உள்ளார்.

60 நாட்கள் கெடு முடிந்து அதிமுக தலைமை அலுவலகம் வருவேன் என்று மார்தட்டிய டிடிவி தினகரன், எடப்பாடி அணியினிரின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, தலைமை அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்து பயந்து ஒதுங்கினார்.

அதைத்தொடர்ந்து மாவட்டத்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள டிடிவி, மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்து உள்ளார்.

டிடிவி அறிவித்துள்ள பொறுப்பாளர்கள் பலர் தற்போது எடப்பாடி அணியிலும், ஓபிஎஸ் அணியிலும் இருந்து வரும் நிலையில் டிடிவியின்  திடீர் அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவியால் அறிவிக்கப்பட்ட பலர் அவர் அறிவித்துள்ள பதவியை ஏற்க மறுத்து எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில், கழக மகளிர் அணி துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட  சத்யாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து,  பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம்  விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாண்புமிகுபுரட்சி தலைவி அம்மா அவர்களால பண்ருட்டி் சட்ட மன்ற உறுப்பினராக்கப்பட்டு சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறேன் மாண்புமிகுபுரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி மாண்புமிகு
அண்ணன்  எடப்பாடி யார் தலைமையில்சிறப்பான ஆட்சி  நடைபெற்று வரும் நிலையில், எனக்கு தெரியாமல், தன்னிச்சையாக தேர்தல் கமிஷனால் ஏற்றுக்கொள்ள படாத T. T V தினகரன் அவர்களால் எனக்கு கழக மகளிர் அணி இணை செயலாளராக பொறுப்பு அறிவிக்க விக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

கழகமும், ஆட்சியும் மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்பது கழக தொண்டர்களின் கருத்து எனவே இந்த பதவியை  நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

அண்ணன் எடப்பாடி யாருக்கு ஆதரவாக தொடர்ந்து கழக பணியாற்றுவேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்பி, எம், எல்,ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து அண்ணன் எடப்பாடி யார் தலைமையின் கீழ் உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.