மதுரை:

மிழக எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு அறிவித்த சம்பள உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வறுமையால் மக்கள் அவதிப்படும் நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையாக என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்வழக்கு விசாரணைக்கு உகந்ததா எனவும்  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசின் பதிலையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.

எம்.எல்.ஏ. ஊதிய உயர்வு அறிவிப்பு அரசின் நிர்வாக நீதியிலானது என்பதால், இதில் கோர்ட்டு தலையிட முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழக எம்எல்ஏக்களின் மாத சம்பளம் 1.05 லட்சமாக உயர்த்தப்படுவதாக கடந்த மாதம் 19ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  சட்டமன்றத்தில் வெளியிட்டு உள்ளார். இதன் காரணமாக எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்ந்தது.

இதை எதிர்த்து, சம்பள உயர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.