மதுரை,
சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்ய ஏதுவாக அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கெடு விதித்துள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சிலை கடத்தல் தடுப்பு தனி அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், சந்தேகங்கள் உள்ளதாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மதுரையில் இருந்து நீதிபதி நீதிபதி ஆர்.மகாதேவன் காணொலி காட்சி விசாரித்தார்.
அதைத்தொடர்ந்து, சிலைகள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஐ.ஜி பொன்.மாணிக்க வேலிடம் ஒப்படைக்க வேண்டும், இதற்காக திருச்சியில் அவருக்கு தலைமை அலுவலகம் அமைத்து, அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துக் கொடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இதற்கான அரசாணையை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகின்ற 10ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.