சென்னை
கோயில்களில் தரப்படும் முடிக் காணிக்கை சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வாங்கப்பட்டு விக் ஆக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தென் இந்தியர்களிடையே கோயில்களில் முடி காணிக்கை செலுத்துவது ஒரு பரம்பரைப் பழக்கம். உயிர் காத்த கடவுளுக்கு என் மயிரை காணிக்கை ஆக்குகிறேன் என பலரும் வேண்டிக் கொள்வார்கள். இவ்வாறு முடி காணிக்கை என்பது திருப்பதியில் மிகவும் அதிகம். “திருப்பதியில் மொட்டை தலை உள்ளவரை தேடுவது போல்” என்னும் பழமொழியை நாம் பலமுறை கேட்டு இருப்போம்.
அதே போல சென்னையை அடுத்த திருத்தணி முருகன் கோவில், அவ்வளவு ஏன் ஆறுபடை வீடுகளிலும் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்துவோர் பல்லாயிரம் உண்டு. அந்த முடியை என்ன செய்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.
அந்த முடி எல்லாம் ஏல முறையில் விக் எனப்படும் (டோப்பா என்றும் கூறுவார்கள்) போலி முடி தயாரிப்பவர்களால் வாங்கப்படுகின்றன. இது போல வாங்கப்பட்ட முடிகள் முதலில் நீளம் மற்றும் அமைப்பை பொறுத்து பிரித்து வைக்கப்படுகின்றன. அந்த முடிகளை நன்கு கழுவியபின் காய வைக்கப்படுகின்றன. பிறகு அந்த முடிகள் ஒரே அளவாக வெட்டப்பட்டு கட்டி வைக்கப்படுகின்றன. அந்த முடிகள் பின் பல வேறு தொழிலாளர்களின் கைவண்ணத்தில் விதம் விதமான விக் ஆக மாறுகிறது. இவைகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகிலேயே இந்தியா தான் முடி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இந்தியர்களின் தலைமுடிக்கு உலகில் தனி மதிப்பு உள்ளது. ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஆஃப்ரிக்காவுக்கும் இந்த விக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாட்டு மங்கையர்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது புதுப்புது ஸ்டைலான விக்குகளை மாற்றுவது வழக்கம். எனவே இங்கு அதிகம் விற்பனையாவது இந்திய மேக்குகளே