தஞ்சாவூர்,
ஓஎன்ஜிசிக்கு எதிரான கதிராமங்கலத்தில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கதிராமங்கலம் சென்று, போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக, கதிராமங்கலத்தில் மக்கள் தொடர் போராடி வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற போராட்டத்தின்போது பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுதலை செய்ய அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள், கதிராமங்கலம் வந்து நேரடியாகத் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கதிராமங்கலம் வந்துள்ளார். நேரடியாக போரட்டகளத்திற்கு வந்த அவர், அங்கு போராடும் மக்களிடம் தனது ஆதரவை தெரிவித்தார்.