
சென்னை
இந்த வருடத்துக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என அறிவித்துள்ளதால் சென்னை அலுவலகத்தில் அதிக கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
வருமான வரி கணக்கு (ரிட்டர்ன்) தாக்கல் செய்ய நாளை (31.07.2017) திங்கட் கிழமை கடைசி நாள் என அறிவித்துள்ளது. அதனால் வருமான வரி அலுவலகங்கள் விடுமுறை தினமான இன்றும் செயல்படுகிறது. மேலும் கணக்கு தாக்கல் செய்வோரின் வசதிக்காக மேலும் பல கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது தவிர அனைத்து வருமான வரி சேவை மையங்கள் மட்டுமின்றி, கிரீம்ஸ் ரோடு மற்றும் தாம்பரம் பி எஸ் என் எல் அலுவலகங்களிலும் வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel