சென்னை:

சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத்  தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ல் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. மேலும், சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் குறித்து ஆராய குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த குழு ஆய்வு நடத்தி, நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றலாம். இந்த மரங்களால் பாதிப்பு ஏற்படுகிறது என பரிந்துரை செய்தது.

இதனையடுத்து, முன்னர் பிறப்பித்த தடையை நீக்கி, நீர்நிலைகளில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட அனுமதி வழங்கியது.

இதுகுறித்த வழக்கில் மனுதாரர், சீமைக்கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும்,  சீமைக்கருவேல மரங்களில் இருந்து எரிபொருள், காகிதம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன . எனவே சீமைக்கருவேல மரங்களை வெட்ட கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இடைக்கால தடை விதித்திருந்த சென்னை ஐகோர்ட்டு, தற்போது தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.