
பெங்களூர் :
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தரம் சிங் மாரடைப்பால் காலமானார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான என். தரம் சிங், இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
80 வயதான தரம் சிங் வயோதிகம் காரணமாக பெங்களூருவில் உள்ள ராமையா நினைவு மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்த பெங்களூரூவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி பிறந்த இவர், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை கர்நாடகாவின் 17-வது முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.
தொடர்ந்து ஏழு முறை கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள தரம்சிங், 14-வது லோக் சபா தேர்தலில் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]