சென்னை,

டந்த சில நாட்களாக நடிகர் கமலஹாசனின் அரசுக்கு எதிரான டுவிட்டுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் பதிவிட்ட டுவிட்டில், தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழல் குறித்து, அமைச்சர்களின் இ.மெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்ப ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழகஅமைச்சர்களின் இ.மெயில், போன் நம்பர் போன்ற தகவல்கள், அரசின் வெப் சைட்டிலிருந்து உடனடியாக அகற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மீண்டும் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன்,

என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம்.எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்  என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், “புரட்சியாளர்கள் தோல்வியையும் சாவையும் கண்டு பயப்படமாட்டார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தமிழக அமைச்சர்களின்  கொலை மிரட்டல் பேச்சு காரணமாக இப்படி ஒரு டுவிட்டை கமல் பதிவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.