பாட்னா,

பீகாரில் நிதிஷ்குமாருக்கும், லல்லுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ்குமார்.

பீகாரில் நிதிஷ்குமாரின் தலைமையில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமாருக்கு லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளமும் காங்கிரசும் ஆதரவு கொடுத்து வருகிறது.

சமீபத்தில் துணைமுதல்வராக உள்ள லல்லுவின் மகனான  தேஜஸ்வி யாதவ் விவகாரத்தில் லாலுபிரசாத்துடன் ஏற்பட்ட மோதலால் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தேஜஸ்வி மீது நடவடிக்கை எடுத்த மறுத்த லல்லுவின் பிடிவாதம் காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து  ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் நிதிஷ்குமார்.

கூட்டணி கட்சி தலைவரான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்த போது முறைகேடுகள் செய்து சொத்துக்கள் வாங்கி குவித்த புகார்களில் தற்போது துணை முதல்வராக உள்ள, தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது.

இதனால் தேஜஸ்வி பதவி விலக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

முறைகேடு புகாரில் சிக்கிய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவை பதவி விலக நிதிஷ்குமார் வலியுறுத்தியும், தேஜஸ்வியாதவ் பதவி விலக லாலுபிரசாத் ஒப்புக் கொள்ளாததால் நிதிஷ்குமார் ராஜினாமா செய்வதாக கூறி உள்ளார்.