ர்வாடி, ராமநாதபுரம்

பாகிஸ்தானை சேர்ந்த ஒரு போதை பொருள் கடத்தல்காரர் இரண்டு போலி ஆதார் அட்டைகளுடன் இந்தியாவில் வலம் வந்த பின் தமிழ்நாடு போலிசாரால் ஏர்வாடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரை சேர்ந்தவர் முகமது யூனுஸ்.  அறுபத்தைந்து வயதான இவர் போதைப் பொருள் கடத்துபவர்.  ஆனால் வெளி உலகில் தன்னை இலங்கையுடன் பருப்பு வியாபாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்.

மூன்று மாதம் முன்பு கடத்தலுக்காக அவர் இலங்கை சென்றுள்ளார்.  இவர் பலமொழிகள் பேசத் தெரிந்ததால், இவரை இலங்கையில் உள்ள ஒரு போதைப் பொருள் தரகருக்கு மிகவும் பிடித்து விட்டது.  இவருக்கு அகமதாபாத்திலிருந்து இரண்டு பெட்டிகள் பிரவுன் சுகர் கடத்தி வரும் பொறுப்பை கொடுத்தார்.   இவருக்கு முன் பணமாக $400 தரப்பட்டது.

கடந்த மே மாதம் 2ஆம் தேதி கள்ள தோணி மூலம், அதிராம்பட்டிணம் வந்து அங்கிருந்து இவர் மதுரை, ராமநாதபுரம், சென்னை, பெங்களூரு, அகமதாபாத், அஜ்மீர் உட்பட பல இடங்களுக்கும் தங்கு தடையின்றி சென்று வந்துள்ளார்.  எந்த மாநில போலிசாரும் இவரை கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு துயரமான விஷயம்.

அகமதாபாத்தில் உள்ளவரால் இவருக்கு பிரவுன் சுகர் சப்ளை செய்யமுடியாததால் இவரை இலங்கைக்கு திரும்பிப் போகச் சொல்லி விட்டார். இவர் இலங்கை தரகருக்கு செய்தி அனுப்பி தான் இலங்கை வர ஒரு கள்ளத்தோணி ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.

இலங்கை தரகர் கீழக்கரையில் இருந்து இவருக்கு கள்ளத்தோணி ஏற்பாடு செய்துள்ளார். யூனுஸ் இலங்கை செல்வதற்காக ஏர்வாடி வந்து அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார்.  யூனுசிடம் இரண்டு ஆதார் கார்டுகள் உள்ளன.  அதைக் கொண்டுதான் அவர் லாட்ஜுகளில் தங்குகிறார்.    ஏர்வாடியில் உள்ள ஒரு இன்ஃபார்மர் மூலம் விஷயம் அறிந்த தமிழ்நாடு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மக்கள் மனதில் எழும் கேள்விகள்

தமிழ்நாடு போலிசாருக்கு தகவல் கிடைத்தது போல் மற்ற மாநில போலிசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லையா?  அது ஏன்?

அகமதாபாத் நகரில் இது போல போதை மருந்து வியாபாரி இருப்பது இதுவரை அந்த அரசுக்கு தெரிந்ததாகவோ, இல்லை எந்தப் போலிசும் அந்த போதை மருந்து வியாபாரியைக் கைது செய்ததாகவோ தெரியவில்லை.  அது ஏன்?

இதுவரை குஜராத், மற்றும் ராஜஸ்தான் அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன?

எங்கும் எதிலும் ஆதார் என்னும் நிலையில் ஒரு பாகிஸ்தான் பிரஜைக்கு எவ்வாறு ஆதார் அதுவும் இரண்டு ஆதார் கார்டுகள் கிடைத்தன?

கேள்விகள் !  கேள்விகள்!! கேள்விகள்!!

ஆனால் விடையில்லா கேள்விகள்