பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி சொன்ன பொய்களை, படக்காட்சிகளை பதிவிட்டு வெளிச்சம்போட்டு காட்டிய தொகுப்பாளர் கமல்ஹாசன், காயத்ரியை விட்டுவிட்டது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் ஜூலி, வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாய் கதறினார். இதை நடிப்பு என காயத்ரி கூறினார். அந்த நேரத்தில் ஜூலிக்கு ஆதரவாக ஓவியா இருந்தார். ஆனால் பிறகு மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு ஓவியாவை எதிர்த்தார் ஜூலி. மேலும், காயத்ரிக்கும் தனக்கும் ஓவியாதான் கோள் மூட்டி விட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இன்று பழைய படக்காட்சிகளை போட்டுக்காட்டிய தொகுப்பாளர் கமல்ஹாசன், ஜூலி பொய் சொல்வதை அம்பலப்படுத்தினார்.
மேலும், “தான் சொல்லும் பொய்யை உண்மையென நம்புவது ஒருவித மனோபாவம்” என்றும் கமல் கூறினார். இதனால் “நான் என்ன மெண்ட்டலா” என்று ஜூலி கதறினார்.

இந்த நிலையில், நெட்டிசன்கள் ஜூலிக்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரம், “ஜூலி மட்டுமா பொய் கூறினார். காயத்ரியும் பல பொய்களை கூறிக்கொண்டிருக்கிறார். இது அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் ஜூலியை அம்பலப்படுத்திய கமல், காயத்ரியை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?
“அந்நியன்” படத்தில், சிறு சிறு தவறு செய்பவர்களைக்கூட பிராமண கதாபாத்திரத்தில் வரும் நாயகன் கொலை செய்துவிடுவான். ஆனால் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பளிக்க லஞ்சம் கேட்ட பிராமணரை விட்டுவிடுவான். அது போல பிராமண இனத்தவரான காயத்ரியை விட்டுவிடகிறாரா பிராமணரான கமல்ஹாசன்” என்றும் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரம் இதற்கு பதில் சொல்லும் விதமாகவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள், “தனக்கு கால்சியம் சத்து குறைவாக இருப்பதாக மெடிக்கல் ரிப்போர்ட் வந்திருப்பதாக பிக்பாஸ் கூறினார். இதற்காக ஸ்பெசல் சாக்லேட் கொடுத்தார்” என்று காயத்ரி பொய் கூறியிருந்தார். அதை படக்காட்சிகளைப் போட்டு இதே கமல்தான் அம்பலப்படுத்தினார். மேலும் காயத்ரியின் தாத்தா காலத்திலிருந்தே அவர்கள் வீட்டில் கலப்புத்திருமணங்கள் நடந்துவருகின்றன. ஆகவே காயத்ரியை சாதி வட்டத்துக்குள் அடைக்க முடியாது. அதே போல கமலும் சாதி மதத்துக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பவர்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே தேவையின்றி சாதி சர்ச்சையை இழுக்க வேண்டாம்” என்று அந்த பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
,