தஞ்சாவூர்,

என்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் போராட்டத்தில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துஉள்ளார்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான கிராம மக்களின் போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். கதிராமங்கலத்தில் நடைபெறும் போராட்டத்தில் விஜய காந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்பட கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக  கதிராமங்கலத்தில்  போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் வன்முறை எற்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட  ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த 30-ந் தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில், பொதுமக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியினர் கதிராமங்கலத்தில், மக்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.