சென்னை,

மிழகத்தை திட்டமிட்டே மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசை மற்றொரு காஷ்மீராக உருவாக்க மத்திய அரசு முனைவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் மாநில குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள, மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வரும் 25ந்தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்றும்

இந்த போராட்டம்  மத்திய மாநில அரசு அலுவலகம் முன்பு நடைபெறும் என்று கூறினார்.

மேலும், நாடு முழுவதும்  மக்கள் குடிநீருக்கே அல்லல் பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஆளுபவர்கள், தங்களுக்காகவே வாக்களித்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 மடங்கு சம்பளம் உயர்வு என்பது  அருவருக்கத்தக்கது என்றும்,

சாக்கடையில் வேலை செய்பவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தாத அரசு சட்டமன்ற உறுப்பினர்க ளின்  சம்பளத்தை உயர்த்தி கொள்வது அழகல்ல..  அருவருப்பாக உள்ளது என்று கடுமையாக சாடினார்.

தமிழக மக்கள் நலனில் தமிழக அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வந்தால், ஆளும் கட்சி அடையாளம் தெரியாத அளவுக்கு தூக்கி எறியப்படும் என்றும்,  ஜனநாயக ரீதியாக கருத்து சொன்ன  கமலை, அமைச்சர்கள் மிரட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.

மேலும், சேலம் மாணவி வளர்மதியை  குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பது தமிழகத்தில் இதுவரை நடைபெறாத அடக்குமுறைகளில் ஒன்றாக கம்யூனிஸ்ட் கட்சி பார்ப்பதாகவும், கைது செய்யப்பட்ட மாணவியை உடனே விடுதலை செய்யவேண்டும் என்றும், அந்த மாணவிக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் கூறினார்.

தமிழகத்தை திட்டமிட்டே மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசை மற்றொரு காஷ்மிராக உருவாக்க மத்திய அரசு முனைந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.