மதுரை,
தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமலஹாசன் கடந்த ஆண்டு வரை சமுதாயத்தை பற்றி சிந்திக்கவில்லை என்று கூறினார்.
தமிழக அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும் கமல் டுவிட் செய்திருந்தார்.
இதற்கு தமிழக அமைச்சர்கள், பாரதியஜனதா கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை கூறும்போது, மக்கள் துன்பப்படும் போது கமல் களத்தில் இறங்கி போராடினாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஊழலுக்கு எதிராக கமல் குரல் கொடுப்பதை வரவேற்கிறோம். ஆனால் கமலைப்பொறுத்த வரை, திரைப்படங்களில் மட்டுமே தீவிரமாக நடித்துக்கொண்டிருந்தார். மக்கள் துன்பப்படும்போது கமல் களத்தில் இறங்கி போராடினாரா என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், கொள்கை ரீதியாக தூய்மையான அரசியல் வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டார் என்றும் கூறினார்.