சென்னை:
மருத்துவ கல்வி மீது ஆர்வம் கொண்ட திருச்சியை சேர்ந்தவர் மாணவி ஐஸ்வர்யா. இவர் நீட் தேர்வில் 209 மதிப்பெண் பெற்றள்ளார். இவர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனது ரத்தத்தால் ஒரு போஸ்டர் எழுதியுள்ளார்.
ஊசியை பேனாவாக பயன்படுத்தி அவர் இந்த போஸ்டரை தயாரித்துள்ளார். அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எழுதிய அவர் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அதை வழங்கினார். கடந்த ஆண்டை போல் மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டும் நடத்த தமிழக அரசு நடவடி க்கை எடுக்காதது ஏன்? என்று அவர் அந்த போஸ்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘ஒரு பொது தேர்வு பொதுவான பாடத்திட்டத்தை கொண்டு நடத்தப்படாதது அநீதி’’ என்று சென்னையில் ஐஸ்வர்யா தெரிவித்தார். இவரை போன்று 7 மாணவிகள் சென்னை வ ந்துள்ளனர். அவர்களுடன் குடும்பத்தினர். தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினரும் வந்து ஸ்டாலினை ச ந்தித்தனர். ‘‘அனைத்து கட்சி பிரதிநிதிகளும் முதல்வர் தலைமையில் சென்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டும்’’ என்று அவர்கள் ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்த இளையராஜா கூறுகையில், ‘‘இந்த பிரச்னையை சட்டமன்றத்தில் எழுப்புவதாக ஸ்டாலின் உறுதியளித்தார். நீட் தேர்வு விலக்கு, மாநில கல்வி வாரிய மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய 2 மசோதாக்களில் ஜனாதிபதி ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கிறது’’ என்றார்.
நீட் தேர்வு காரணமாக தமிழக மருத்துவ கல்வி பாதித்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுக் மருத்துவக் கல்லூரி இடங்களும் மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கே கிடைக்கும் வகையில் தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்’’ என்று 2 நாட்கள் நடந்த அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.