டில்லி
டில்லி உயர்நீதி மன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல், மூன்று முறைக்கு மேல் வாய்தா அளிக்க வேண்டாம் என மாவட்ட நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.
நீதிமன்றங்களில் நிலுவையில் பல வழக்குகள் உள்ளன. அவற்றில் பல வழக்குகள் வாய்தா வாங்கப்படுவதால் முடிக்க வெகு நாட்கள் ஆகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வர, மொத்தம் மூன்று வாய்தாக்கள் மட்டுமே ஒரு வழக்குக்கு அளிக்கப்பட வேண்டும் என அரசு அமைத்த ஒரு தீர்ப்பாயம் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன் படி டில்லி உயர்நீதி மன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல், அனைத்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதி மன்றங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, தீர்ப்பாயத்தின் அறிவுரையை பின்பற்றி மூன்று வாய்தாக்களுக்கு மேல் தரக்கூடாது என கூறி உள்ளார். மேலும் அந்த மூன்று வாய்தாக்களுமே, சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே தரப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
அனைத்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேரத்தை மிச்ச்ப்படுத்த அனைத்தையும் மின்னணுமயமாக்கி, வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.