கோலாலம்பூர்:

டந்த 12 நாட்களில் மலேசியாவில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் முறையாக பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு  இந்த காலக்கெடு முடிந்தது தற்போது வரை சுமார் 161,000 தொழிலாளர்கள்  பதிவு செய்துள்ளனர்..

இந்த நிலையில், பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்ய மலேசிய அரசின் குடிவரவுத்துறை முடிவெடுத்தது. இதுவரை 3,323 தொழிலாளர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பங்களாதேஷை சேர்ந்த 1,230 பேர், இந்தோனேஷியாவைச் சேர்ந்த  825  பேர்  மியான்மரைச் சேர்ந்த 273 பேர், வியட்னாமைச் சேர்ந்த 119 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 123 பேர், பிலிப்பைன்சை சேர்ந்த 95 பேர் அடங்குவர்.

மலேசியாவின் அருகில் உள்ள பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள நாடுகளில் இருந்து கள்ளத்தனமாக ஆட்களைக் கொண்டுவருகின்றன சில  மலேசிய நிறுவனங்கள். அந்த தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த ஊதியம் அளித்து கடுமையாக வேலை வாங்குகின்றன.

இந்தத் தொழிலாளர்கள் விசா இன்றி மலேசியாவில் தங்கவைக்கப்படுகின்றனர். தற்போது இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது மலேசிய அரசு. ஆனால் இந்த நடவடிக்கையில் அப்பாவித் தொழிலாளர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். இவர்களை அழைத்துவரும் இடைத்தரகர்கள், வேலை அளிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை என்று புகார் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]