பெங்களூரு

ர்நாடகாவில் உள்ள சி பி எஸ் இ, மற்றும் ஐ சி எஸ் ஈ உட்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் கன்னடம் கட்டாயப்பாடம் ஆக்கப்பட்டுள்ளது.  இத்துடன் அனைத்து பள்ளிகளிலும் நட கீதே எனப்படும் கன்னட வாழ்த்துப் பாடலையும் இசைக்க வேண்டும் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கேரள அரசு, மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழிப்பாடத்தை கட்டாயப் பாடமாக்கி சட்டம் இயற்றியது தெரிந்ததே.  தற்போது கேரள மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் கன்னட மொழி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னடர்கள் சமீபத்தில் நம்ம மெட்ரோ போர்டுகளில் இருந்த இந்தி எழுத்த்க்களை அழித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தியை திணிப்பதால் கன்னட மொழி சிறிது சிறிதாக அழியத் தொடங்கும் என பல கன்னட ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்   இதை மனதில் கொண்ட கர்நாடகா முதல்வர் சித்தராமலிங்கையா ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடமொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்னும் உத்தரவை வெளியிட்டுள்ளார்.

பல பள்ளிகளில் ஏற்கனவே கன்னட மொழி பயிற்றுவிக்கப் பட்டாலும் சி பி எஸ் ஈ, போன்ற பள்ளிகளில் கன்னட மொழிப்பாடம் கட்டாயம் இல்லை.  இந்த உத்தரவின் மூலம் இந்தப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரம் கன்னட மொழி கட்டாயம் ஆகும்.  இது பற்றிய சுற்றறிக்கை அனைத்து சிபிஎஸ்ஈ, மற்றும் ஐசிஎஸ்ஈ பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நட கீதே எனப்படும் கன்னட வாழ்த்துப் பாடல் அரசுப் பள்ளிகளில் இசைக்கப்படுகின்றது.   ஆனால் தனியார் பள்ளிகளில் இசைக்கப்படுவதில்லை.  இதை இனிமேல் அனைத்துப் பள்ளிகளிலும் பாடவேண்டும் எனவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தற்போது தனியார் மற்றும் சி பி எஸ் ஈ பள்ளிகளில் காலையில் தேசிய கீதம் மட்டுமே பாடப் படுகிறது.  சில தனியார் பள்ளிகளில் பள்ளி வாழ்த்து இசைக்கப்படுகிறது.  அரசு தரப்பில் இதற்கு ஏதும் தடை இல்லை எனவும், ஆனால் அத்துடன் இனி கன்னட மொழி வாழ்த்துப் பாடலையும் பாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கன்னடவழியில் கல்வி பயின்றவர்க்ளுக்கு அரசு வேலவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.