
சென்னை
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் அணிக்கு விதிக்கப் பட்ட தடைக்காலம் முடிவடைந்ததால் தற்போது DOUBLE THE GETHTHU என்னும் கோஷத்துடன் களம் இறங்கியுள்ளது,
ஐ பி எல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு இதே நாளில் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இப்போது இரண்டு ஆண்டுகள் ஆனதால் தடைக்காலம் முடிவடைந்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது.

இப்போது பழைய விசில் போடு கோஷத்துக்கு பதில் டபுள் தி கெத்து என கோஷத்துடன் வந்துள்ளது.
அணியின் தலைவர் தோனி தனது டிவிட்டர் பக்கத்தில் ”மச்சி, ஆர் யு ரெடி” என ரசிகர்களை கேட்கிறார்.
ரசிகர்களோ தங்களின் டிவிட்டர் பக்கத்திலும், முகநூல் பக்கத்திலும், சி எஸ் கே புகைப்படத்தை பதிந்து, “ வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என ஹேஷ் டாக் உடன் பதிந்து மகிழ்கிறார்கள்.
ஒரு மாநில அளவிலான கிரிக்கெட் அணிக்கு இவ்வளவு வரவேற்பு உள்ளது என்பது சி எஸ் கே வுக்கு டபுள் தி கெத்து இல்லை. டிரிபிள் தி கெத்து எனக்கூட சொல்லலாம்.
[youtube-feed feed=1]