டில்லி,
மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், பழைய நகையை விற்றாலும் 3% ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இது பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதன் காரணமாக ஏழைகளின் வயிற்றில் மீண்டும் அடித்துள்ளது மத்திய அரசு,
இந்த மாதம் 1ந்தேதி முதல் நாடு முதல் ஜிஎஸ்டி என சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப் பட்டு உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தற்போது அன்றாங்காய்ச்சிகளின் தலையிலும் கைது வைத்துள்ளது.
அவசர தேவைக்காக பழைய தங்க நகைகளை விற்றாலும், 3 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா கூறி இருப்பதாவது,
பழைய தங்க நகை விற்பனை செய்தால் அதன் மூலம் கிடைக்கும் தொகைக்கு, 3 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
ஒரு வேளை, பழைய நகையை விற்று, புதிய நகையை வாங்குவது என்றால், செலுத்தபட்ட 3 சதவீத வரியை கழித்து கொள்ளலாம்.
ஒருவரிடம் இருந்து நகை கடை வைத்து இருப்பவர் பழைய நகையை வாங்கினால், 3 சதவீத ஜி.எஸ்.டி.,யை வசூலிக்க வேண்டும்.
அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒருவரிடம் இருந்து பழைய நகையை நகை கடைக்காரர் வாங்கினால் , 3,000 ரூபாயை கழித்து கொண்டு தான் மீதி தொகையை வழங்க வேண்டும்.
அதே நேரத்தில், பழைய நகையை கொடுத்து அதில் மாற்றம் செய்து தரும்படி கேட்டால், அது, ‘ஜாப் ஒர்க்’ என, கருதப்பட்டு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே பண மதிப்பிழப்பு, ஆதார் கட்டாயம், சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி வரி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்து, சாமானிய மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது, ஏழை எளிய மக்கள் அவசர தேவைக்காக தங்களது நகைகளை விற்க வேண்டுமானாலும் 3 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது ஏழை மக்களின் வயிற்றில் மத்திய அரசு மீண்டும் அடித்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மத்திய அரசின் இதுபோன்ற அறிவிப்புகள், பாரதியஜனதா அரசு அழிவின் உச்சக்கட்டம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.