டில்லி
மாற்றுத் திறனாளிகளுக்கு இந்திய ரெயில்வேயில் 3 டயர் ஏசி கோச்சில் கீழ் படுக்கை அளிக்கப்படும் என ரெயில்வே செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
சுபர்ணா ராஜ் என்னும் பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டில் தங்கம் வென்றவர். இவர் சமீபத்தில் நாக்பூர் – நிஜாமுதீன் ரெயிலில் மேல் படுக்கை கொடுத்ததால் அதில் பயணம் செய்ய முடியவில்லை. வேறு ஏதும் கீழ் படுக்கை இல்லாததால், அவர் தரையில் படுத்து பயணம் செய்தார்.
இதை அறிந்த ரெயில்வே அமைச்சர் இது குறித்து விசாரித்தார். பின் அவர் அறிவுறுத்தலின்படி இனி 3 டயர் ஏசி கோச்சில் கீழ் படுக்கை மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது போல ஒரு நடைமுறை ஏற்கனவே ஸ்லீப்பர் வகுப்பில் உள்ளது தெரிந்ததே.
ரெயில்வே பிளாட்பாரங்களும் மாற்றுத் திறனாளிகள் வந்து போக வசதியாக மாற்றப்படும் எனவும், காத்திருக்கும் இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படும் எனவும் தெரிய வருகிறது