சென்னை
அதிவேக ரெயில் ஹைபர்லூப் இந்தியாவுக்கு ஸ்பான்சர் செய்ய சென்னையை சேர்ந்த இந்துஸ்தான் பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது.
ஹைபர் லூப் என்னும் குழாய் வழி ரெயில் பயணத்தின் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் நீண்ட தூரத்தை கடக்க முடியும். இது பற்றிய செய்திகளை நமது பத்திரிகை.காம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது தெரிந்ததே.
ஹைபர்லூப் இந்தியா என்பது பிலானியில் சிறியதாக துவங்கப்பட்ட ஒரு அமைப்பு. அதில் ஹைபர்லூப் தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வர புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகள் மற்றும் அதன் மாணவர்கள் மூலம் இந்தியாவில் அமைக்க முன்று வருகிறது.
ஏரோநாட்டிக்கல் எஞ்சினீயரிங் எனப்படும் விண்வெளி பொறியியல் துறையில் முன்னோடியாக விளங்குவது இந்துஸ்தான் பல்கலைக்கழகம். இது ஹைபர்லூப் இந்தியாவுக்கு ரூ. 11.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது. மேலும் தனது மாணவர்கள் சிலரையும் இந்த பிராஜெக்டில் உதவி செய்ய அமர்த்தியுள்ளது.
இதற்கு ஹைபர்லூப் இந்தியா தனது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் வர்கீஸ் தனது பல்கலைக்கழகமும் மாணவர்களும், இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் அமைக்க எல்லா உதவிகளையும் செய்வார்கள் என்றும், இது போல தொழில் நுட்பங்கள் நம்மைப் போன்ற முன்னேறி வரும் நாடுகளுக்கு இன்றியமையாத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.