டில்லி:
குறுகிய தூரம் உள்ள நாடுகளுக்கு குழந்தைகளுடன் இன்ப சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா… இதோ உங்களது பயண செலவை குறைக்க ஒரு டிப்ஸ்..
குறிப்பாக குறைந்த தூரம் உள்ள இடைநில்லா நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் மெட்ரோ மற்றும் பெருநகர விமானநிலையங்களில் இருந்து செல்வதை தவிர்க்க வேண்டும். இதில் இரண்டு பயன்கள் இரு க்கிறது.
சிறிய நகர விமானநிலையங்களில் கூட்டமும் அதிகம் இருக்காது. அதே சமயம் பெரு நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமான கட்டணங்களை விட குறைவான கட்டணத்தில் பயணம் செய்யும் திட்டத்தை இந்த சிறு நகர விமானநிலையங்களில் இருந்து இயக்கப்படும் சில விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
உதாரணமாக சிங்கப்பூருக்கு டெல்லியில் இருந்து செல்வதை தவிர்த்து ஜெய்ப்பூரில் இருந்து பயணம் செய்தால் விமான கட்டணம் குறைவு. இந்த பட்டியலில் லக்னோ, ஜெய்ப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு செல்லலாம்.
குறைந்த தூர வழித்தடங்களில் பட்ஜெட் விமானங்களின் அறிமுகம், இரண்டாம் நிலை விமான நிலையங்களில் இயக்குதல் கட்டணம் குறைவு காரணமாக குறைந்த கட்டணத்தில் விமானங்கள் இயக்கப்ப டுகிறது. உதாரணமாக டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு ஆகஸ்ட் மாதம் செல்ல ரூ.10 ஆயிரத்து 145 கட்டணமாகும். இதே ஜெயப்பூரில் இருந்து செல்ல 45.30 சதவீதம் குறைவாக அதாவது ரூ. 5 ஆயிரத்து 549 மட்டுமே.
விமான கட்டணம் குறைப்பு காரணமாக இரண்டாம் நிலை விமானநிலையங்களில் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஜெய்ப்பூர் மற்றும் திருச்சியில் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை இரு இலக்க எண்களின் அதிகரித்துள்ளது என்று விமான நிலைய ஆணைய புள்ளி விபரங்கள் தெரிவி க்கின்றன.
ஜெய்ப்பூரில் கடந்த ஏப்ரல்&மே மாதத்தில் 26%, திருச்சி 18.2% கடந்த ஆண்டை அதிகமாக வளர்ச்சியடை ந்துள்ளது. ஸ்கூட், டைகர், ஏர் அரேபியா, ஃப்ளை துபாய் போன்ற விமானநிறுவனங்கள் குறைந்த கட்டண விமானங்களை இரண்டாம் நிலை விமானநிலையங்களில் கடந்த 12 முதல் 18 மாதங்களில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட அளவு சந்தையை இந்த நிறுவனங்கள் தக்க வைத்துள்ளது. மேலும், இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு கட்டணம் குறைப்பு செய்ததன் மூலம் நேரடி போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த கட்டண குறைப்பு காரணமாக சிறிய நகரங்களில் வசிக்கும் மக்கள் அண்டை நாடுகளில் உள்ள மலை ஸ்தலங்களுக்கு சர்வதேச விடுமுறை சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். ஜெய்ப்பூர், கொச்சின், லக்னோ, அமிர்தசரஸ் போன்ற பகுதிகளை சேர்ந்தவர் இந்தியாவிற்குள் விடுமுறையை கழிப்பதை தவிர்த்து வெளிநாடு செல்ல தொடங்கியுள்ளனர்.