பீஜிங்
சீனாவின் செய்தித்தாள் ஒன்று, சிக்கிம் தனி நாடு கோரிக்கையை ஆதரித்து இந்தியாவுக்கு சீனா தொல்லைகள் தரும் என்னும் ரீதியில் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, சீனா தலாய் லாமா விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தது தெரிந்ததே. அதே போல இன்று வரை அணுசக்தி விற்பனை நாடுகள் கவுன்சிலில் இந்தியா சேர முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தற்போது சிக்கிம் எல்லையில் சாலை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா சீனாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆத்திரமடைந்த சீனா சிக்கிம் தனி நாடாக்கும் கோரிக்கைக்கு தன் ஆதரவை தெரிவிக்கக்கூடும். பூட்டான் இந்தியாவின் கைப்பிடியில் இருப்பதாக ஏற்கனவே சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது. சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக இருப்பதை சீனா வரவேற்பதாக முதலில் காட்டிக் கொண்டது. ஆனால் இப்போது சிக்கிம் தனி நாடாக தன் ஆதரவை தெரிவிப்பதன் மூலம், சிக்கிம், பூட்டான் ஆகிய பிரதேசங்களில் தனக்கு ஆதரவு பெருகலாம் என நினைக்கிறது.
எல்லைப் பகுதியில் சீனா மற்றும் இந்தியா தன் படை வீரர்களை குவித்து வைத்துள்ளது. சீனா தனது 1962 போரின் வெற்றியைப் போல எப்போதும் வெற்றி காண முடியும் என்னும் நம்பிக்கையில் உள்ளது. ஆனால் இந்தியா இப்போதைய நிலையில் வலுப்பெற்று உள்ளதாக தெரிவித்து உள்ளது. பொருளாதார நிலையில் சீனா பின்னேறத் துவங்குவதும், இந்தியா முன்னேறுவதும் சீனத் தலைவர்களின் கண்களை உறுத்துகின்றன.
சீன மக்களை திருப்திப் படுத்த இது போல செய்திகளை வெளியிட வேண்டிய அவசியத்தில் சீனா உள்ளது.