புவனேஷ்வர்,

சிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒரிசா தலைநகர் புவனேஷ்வரில் இன்று தொடங்கியது.

22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த  800 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதலில் இந்த போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிதிநிலை பிரச்சனையால் ஒரிசாவின் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டது.

ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா விளையாட்டு  மைதானத்தில் இந்த போட்டிகள் இன்று காலை தொடங்கின. இதையொட்டி நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன,

இப்போட்டிகளில் 45 நாடுகளின் 800 வீரர்கள் 42 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். 49 இந்திய வீரர்கள், 46 இந்திய வீராங்கனைகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த வண்ணமிகு போட்டியை ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

முன்னதாக கடந்த 1989-ல் டெல்லியிலும் 2013-ல் ஆண்டு பூனேவிலும் ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 13 பதக்கங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.