
பீஜிங்
சிக்கிம் எல்லை தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்கப்படுகிறது எனவும், இந்தியா பொய் கூறி மக்களை திசை திருப்புகிறது எனவும் சீனா தெரிவித்துள்ளது.
சிக்கிம் எல்லையில் சீனா சாலை அமைப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது தெரிந்ததே.
சீனா அந்த இடம் 1890 ஆம் வருடம் தாங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்த்ப்படி தங்களுக்கு சொந்தமான இடம் எனவும், இந்தியா பொய்யான தகவலை சொல்லி மக்களை திசை திருப்புகிறது எனவும் குற்றம் சாட்டுகிறது. இந்தியா தங்களின் சொந்த மண்ணில் வந்து ஆக்கிரமித்து விட்டு, அதனை பூட்டானின் பூமி எனக் கூறுவதாகவும், அதற்கு பூட்டானும் உடந்தையாக உள்ளது எனவும் மேலும் தெரிவித்தது.
ஏற்கனவே பூட்டான் சீனா தனது எல்லைக்குட்பட்ட இடத்தில் சாலை அமைக்கிறது என புகார் கொடுத்துள்ளது. பூட்டான் நாட்டுக்கு சீனாவுடன் நல்லுறவு இல்லை. இந்தியாவுடன் மட்டுமே அது நட்பு கொண்டுள்ளது. சீனாவின் ஊடகம் ஒன்று, இந்தியாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளது. அதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியா 1962ல் இருந்ததைப் போல இப்போது இல்லை எனவும், பலம் வாய்ந்த நாடாக உள்ளது எனவும் பதிலளித்திருந்தார்.
[youtube-feed feed=1]