டில்லி,

திருமணம் செய்யவும் ஆதார் எண் தேவை என விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என தெரிகிறது.

ஏற்கனவே, பல்வேறு சேவைகள் மற்றும் பண பரிவர்த்தனை, ரேஷன் பொருட்கள் வாங்குவது, பள்ளி குழந்தைகள், சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்   போன்ற பெரும்பாலான சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு.

தற்போது கல்யாணம்  பண்ணவும் ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ‘என மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து சட்ட ஆணையம் கூறியிருப்பதாவது,  திருமண பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம் திருமணம் செய்து ஏமாற்றுபவர்களை தடுக்க முடியும் என்று ஆணையம் கூறியுள்ளது.

கைவிடப்பட்ட பெண்களுக்கு கணவனிடமிருந்து உதவியை பெற்றுத் தரவும் இது உதவியாக இருக்கும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்ட ஆணையம் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்ப்பித்த 270வது அறிக்கையில் இந்தப் பரிந்துரை இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து விரைவில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.