டில்லி,

புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சர் குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியின் பதவிக்காலம் வரும் 6ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால், புதிய தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது.

அச்சர்குமார் ஜோதி வரும் வெள்ளிக்கிழமை தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

64வயதான ஜோதி ஏற்கனவே குஜராத்தில் தலைமை செயலாளராக பதவியாற்றியவர். 1975ம் ஆண்டைய ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர்.

இவர் கடந்த 2015ம் ஆண்டு மே7ந்தேதி தேர்தல் ஆணையத்தில் 3 கமிஷனர்களில் ஒருவராக பதவி வகித்து வருகிறார்.

[youtube-feed feed=1]