டில்லி

புதிதாக அறிமுகபடுத்த உள்ள ரூ.200 நோட்டுகள் அச்சடிக்க ரிசர்வ் வங்கியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதிய 200 ரூ நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்னும் செய்தி பல நாட்களாக உலவி வருகிறது தெரிந்ததே.  இந்நிலையில் புதிய நோட்டுக்களை அச்சடிக்க உத்தரவு (ப்ரிண்டிங் ஆர்டர்) பிறப்பிக்கப் பட்டுள்ளது.  தினசரி உபயோகத்துக்கு தற்போது இருந்து வரும் கரன்சி நோட்டுக்களின் பற்றாக்குறை இந்த ரூ 200 நோட்டுகள் வெளிவந்தபின் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்த நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என தெரிகிறது.   இந்த நோட்டுக்களில் பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது எனவும், இதை யாராலும் கள்ள நோட்டு அடிக்க முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.