பெங்களூர்,

ந்து கோவில் வளாகத்தில்  இஸ்லாமிய நடமுறைகள் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பு தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார், எதிர்காலத்தில் இதுபோல் நடைபெற்றால் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுமோட்டோ  (தானாகவே முன்வந்து பதிவு செய்யும் வழக்கு)   வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு  முன்பு பெங்களூர் அருகே உள்ள உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளது.

உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், கோவில் மடாதிபதி ஸ்ரீவிஸ்வேஷா தீர்த்த சுவாமிகள், கடந்த மாதம் 24தேதி இஸ்லாமியர்களின் புனித நோன்பையொட்டி, இப்தார் நேன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சவுதாரா உபகார கூட்டா என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இஃப்தார் விருந்து உடுப்பி கிருஷ்ணா மடத்தில் உள்ள கோயிலின் அன்னதான மண்டபத்தில் நடந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்து வந்த வேளையில், இந்து அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தன.

இதன் காரணமாக,  ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்லிக் உடுப்பி கிருஷ்ண மடத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அப்போது, இதுபோன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் இந்து கோவில்களில் நடைபெற்றால் ரத்த ஆறு ஓடும் என்று மிரட்டியிருந்தார்.

அவரின் வன்முறையை தூண்டும் வகையிலான மிரட்டல் பேச்சு குறித்து அவர்மீது சுமோட்டோ (தானாகவே பதிவு செய்யும் வழக்கு)  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறிய உடுப்பி மடாதிபதி, முத்லிக்கின் பேச்சை புறந்தள்ளுவதாகவும், அவரது மிரட்டலுக்கு யாரும் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.

மேலும்,  ‘இப்தார் நோன்பு குறித்து எதிர்ப்பவர்கள் சாஸ்திரங்களை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்’ என்றும் குட்டு வைத்துள்ளார்.