பாலாசோர்:
25 முதல் 30 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து வருகிறது.

விரைவான எதிர்வினை ஆற்றும் இந்த ஏவுகணை கடந்த மாதம் 4 ந் தேதி ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் இந்த ஏவுகணை சோதனை நடந்தது. ஒடிசாவின் பாலாசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தின் நடமாடும் செலுத்து வாகனத்தில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
Patrikai.com official YouTube Channel