Automated Auditors About Us

மும்பை,

ஜிஎஸ்டி அமல்படுத்தியன் எதிரொலியாக ஆடிட்டர்களின் ஆலோசனை கட்டணத்தை 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளார்கள்.

ஜிஎஸ்டி காரணமாக கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு புதிய நடைமுறைகள் உள்ளதால் சாட்டர்ட் அக்கவுண்டன்ட், ஜிஎஸ்டி கன்சல்டன்டட்கள், வரி ஆலோசகர்கள்  தங்களது ஆலோசனை கட்டணத்தை 30 சதவிகிதம் முதல் உயர்த்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளதால், அது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் ஆடிட்டர்கள், வரி ஆலோசகர்கள், வரி ஆலோசனை நிறுவனங்கள், வரி கட்டுதல் மற்றும் இ-பைலிங் செய்வதற்கான கட்டணத்தை 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசு அமல்படுத்தியிருக்குடம புதிய வரிவிதிப்பு குறித்து, முழுமையான விவரம் தெரியாமல், அதுகுறித்து விவாதிக்க வரி ஆலோசகர்களை நிறுவனங்கள் நாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜிஎஸ்டி இந்த மாதம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததுமே, தங்களின்  ஆலோசனை கட்டணத்தை 15 சதவிகிதிம் உயர்த்திய ஆடிட்டர்கள், வரி ஆலோசகர்கள் தற்போது மேலும் 15 சதவிகித கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகவும், இதன் காரணமாக வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், மும்பை  சில்லறை வணிகர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் விரேய்ன் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய சட்டங்களை சமாளிக்க போராடி வரும் வணிகர்கள் இப்போது வரி ஆலோசர்களின் ஆலோசன கட்டணம் காரணமாக மேலும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும் அவர்  கூறி உள்ளார்.

மகாராஷ்டிராவில் 96 சதவீதம் வர்த்தகர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். மும்பையில் மட்டும் இரண்டு லட்சம் கடை உரிமையாளர்கள் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதுகுறித்து மும்பையை சார்ந்த வரி ஆலோசகர் ஒருவர்  கூறியதாவது, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி காரணமாக, வணிர்களின் ஆலோசனை கட்டணம் 30-50 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பதை ஒத்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து,   இந்திய வங்கியின் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ட்டேர்டு அக்கவுண்ட்ஸ் கூறியிருப்பதாவது,

ஜி.எஸ்.டியின் பயனாக மத்தியஅரசுக்கு ரூ 15,000 கோடி கூடுதல் கட்டணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள், தொழில் மற்றும் சிறு தொழில்களுக்கு வரி விதிப்புகள் குறித்து ஒத்துழைப்பு கொடுக்க  மூன்று லட்சம் விற்பனை வரி-வரிக் காப்பீட்டு வல்லுநர்கள் நாட்டில் உள்ளனர் என்றும், இந்தியாவில் 1.5 லட்சம் ஆடிட்டர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.
ஜிஎஸ்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள  பிரபல வரி ஆலோசனை நிறுவனமான ‘அசோக் மகேஸ்வரி & அசோசியேட்ஸ் எல்.எல்.பி’ பங்குதாரரான அமித் மகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது,

தற்போது அறிமுகமாகியுள்ள ஜிஎஸ்டி காரணமாக வரி செலுத்துவோருக்கு சிக்கல்கள் நிச்சயமாக அதிகரிக்கும்.

இப்போது, சேவை வரி மதிப்பீட்டாளர்கள் வருடத்திற்கு இரண்டுமுறை வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதன் காரணமாக வேலை பளு  அதிகரிக்கும்.

இது தவிர, டி.டி.எஸ், டிசிஎஸ் முதலியவற்றை அறிமுகப்படுத்துதல் போன்ற மற்ற சிக்கல்கள் ஜிஎஸ்டி காரணமாக ஏற்படும் என்றும் கூறி உள்ளார்.

ஜிஎஸ்டி காரணமாக வரி செலுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாலும், பல்வேறு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியதிருப்பதாலும் வரி ஆலோசகர்கள் மற்றும் ஆடிட்டர்கள் தங்களது ஆலோசனை கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜிஎஸ்டி காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ள வணிகர்கள் தற்போது வரி ஆலோசகர்களின் ஆலோசனை கட்டணம் உயர்வு காரணமாக பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.