சென்னை:

நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது.

தற்போது சமையல் எரிவாயுவுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது காரணமாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரித்துள்ளது.

மோடி அரசு பதவிக்கு வந்தபிறகு, சமையல் கேசின் மானியம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜிஎஸ்டி விரி விதித்திருப்பதன் காரணமாக எரிவாயுவுவின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.560 ஆக இருந்தது. தற்போது ஜிஎஸ் வரியால் ரூ.14.50 உயர்த்தப்பட்டு, ரூ.574.50 செலுத்த வேண்டிய நிலையில் மக்களுக்கு சுமை கூடியுள்ளது.

ஏற்கனவே மோடி அரசு பணமதிப்பிழப்பு செய்து பொதுமக்களிடையே வெறுப்பை சம்பாதித்துள்ளது. தற்போது சமையஸ் கேசின் விலையை உயர்த்தி, நாடு முழுவதும் உள்ள பெண்களின் வயிற்றெரிச்சலையும் கூடுதலாக  பெற்றுள்ளது.