பனாஜி:
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சென்ற நாடுகளை விட மோடி குறைவான நாடுகளுக்குத்தான் சுற்றுப்பயணம் சென்றுள்ளார் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கோவாவில் பா.ஜ. அரசின் 3 ஆண்டு சாதனை குறித்து நடந்த விழாவில் கலந்து கொண்ட பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பேசுகையில், ‘‘நிகழ்ச்சிகளில் எழுதி வைத்துப் படிக்கும் பழக்கம் கொண்ட மன்மோகன் சிங் சில சமயம் தாய்லாந்தில் படிக்க வேண்டியதை, மலேசியாவில் வாசித்து விடுவார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சென்ற நாடுகளை விட பிரதமர் மோடி குறைவான நாடுகளுக்குத்தான் சென்றுள்ளார். சீனா, அமெரிக்கா, ரஷ்யா என உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் ஆயிரக்கணக்கான மக்களே இந்தியாவின் பெருமை’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel