டில்லி
அத்தியாவசிய மருந்துக்களை ஆகஸ்ட் வரை முன்பிருந்த விலையிலேயே வாங்கிக்கொள்ளலாம் என மருந்து விற்பனைத்துறை அறிவித்துள்ளது.
நேற்று முதல் அமுலான ஜிஎஸ்டியில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 12% வரியும், இன்சுலின், அவசர மருத்துவ சேவைக்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்கு 5% வரியும் விதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான சில்லறை மருந்து வணிகர்கள் தங்களிடம் ஏற்கனவே வாங்கி இருப்பிலுள்ள அத்தியாவசிய மருந்துகளை எந்த வரி விகிதத்தில் விற்பது என சந்தேகத்தில் இருந்தனர்.
மருந்து விற்பனைத்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே இருப்பில் உள்ள அத்தியாவசிய மருந்துகளை ஆகஸ்ட் வரை பழைய வரி விகிதத்திலேயே விற்பனை செய்யலாம் எனவும், புதிதாக வாங்கப்படும் மருந்துக்களை ஜிஎஸ்டியுடன் விற்பனை செய்யலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.