இந்திய, சீன எல்லையில் இரு நாடுகளும் தங்களது படை வீரர்களை குவித்து வருவதால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய யாத்ரிகர்களை சீனா திருப்பி அனுப்பியது. மேலும் டோக்லம் என்ற பகுதியில் சீனா சாலை அமைத்து வருகிறது.
ஏற்கனவே திபெத், சிக்கிம் மாநில பிரச்சினை இருந்து வரும் நிலையில் தற்போது சீனாவின் நடவடிக்கை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்திய பகுதிகுள் நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக இரு நாடுகளும் பரஸ்பரம் அத்து மீறி நுழைவதாக குற்றச்சாட்டுக்களை கூறி வந்துள்ள நிலையில் இந்திய ராணுவ தளபதி ராவத் சீன எல்லை பகுதிக்கு சென்று, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் காரணமாக சீனா, சுமார் 3 ஆயிரம் வீரர்களை பிரச்சினைக்குரிய பகுதிகளில் குவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளது.
இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.