டில்லி
நேற்று ஈத் பண்டிகை நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய மன்மோகன் சிங் மதவாத அடிப்படையில் பிரிவினை உண்டாவதற்கு வருத்தம் தெரிவித்தார்.
ஈத் பண்டிகையை ஒட்டி ஒரு விழா ஒன்று நேற்று தலைநகரில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது :
”இந்தியாவில் தற்போது மதவாத அடிப்படையில் பிரிவினை உண்டாகி வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. இந்தியர்கள் அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். நமது அரசியல் சட்டப்படி அனைவரும் சமம் என்பதை நினைவில் கொண்டு, மத வேற்றுமைகளை மனதில் இருந்து களைந்து, மத, இன வேற்றுமைகளைக் களையப் பாடுபட வேண்டும் “ என கூறினார்