“பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கவே முடியாது” என்று மோடி பேசியது அரசியல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. . குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட எல்லோரையும் நான் அழைக்கிறேன். நாம் வன்முறையற்ற மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது, காந்தி பிறந்த மண். அதை ஏன் நாம் மறந்தோம். எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வாக முடியாது. சட்டத்தைக் கையில் எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கவே முடியாது’ என்று பேசினார். மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஆசாத், “பிரதமர் மோடியின் பேச்சு ஓர் அரசியல் ஸ்டன்ட் ஆகும். பசுப் பாதுகாவலர்களுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்திய பிறகு, அந்த அழுத்தத்தால் இப்படி பேசுகிறார்.
இது ஒரு கண் துடைப்பு வேலை. இதை நாங்கள் நம்பவே மாட்டோம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.