விஜயவாடா:,
இந்தியாவின் பேட்மின்டன் வீரரான ஸ்ரீகாந்துக்கு ஆந்திர அரசு ரூ.50 லட்சத்துடன் குரூப் 1 அதிகாரிக்கான பணி கொடுத்து கவுரவப்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியன் ஓபன், இந்தோநேஷியா பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவுக்களுக்கான போட்டி களில் சாம்பியன் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்து ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை வழங்கினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போட்டியில் சீன வீரர் யுகி ஷி-யை 21-10 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு 27 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.
சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஸ்ரீகாந்த் தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதி பெற்றார்.
இதற்கு முன்னதாக கடந்த வாரம் சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசியா ஒபன் இறுதிப் போட்டிகளில் ஸ்ரீகாந்த் விளையாடியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீரர் சென் லாங்கை 22-20, 21-16 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார்.
இதையடுத்து ஸ்ரீகாந்துக்கு ஆந்திர அரசு விழா நடத்தி கவுரவப்படுதுவதாக அறிவித்து இருந்தது.
இன்று விஜயவாடாவில் தும்மலபள்ளி கலாசேத்ராவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
அப்போது ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும், மாநிலத்தில் குரூப் 1 அதிகாரி பணியும் வழங்கி ஸ்ரீகாந்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவுரப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்தின் கோச் கோபிசந்துக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய சந்திரபாபு நாயுடு, வெளிநாட்டு கோச்களிடம் ஸ்ரீகாந்த் பயிற்சி பெற விரும்பினால் அதற்கு தேவையான நிதியுதவியை அரசு அளிக்கும் என்றும்,
அமராவதியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும்.விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதியில் பாட்மிண்டன் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.