சென்னை,

மிழக டிஜிபியின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய டிஜிபியாக யார் நியமிக்கப்படு வார் என காவலர்களிடையே பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போதுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் 5 பேரின் பெயர்களை டிஜிபியாக நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

 

1. ஜாங்கிட்
2. அர்ச்சனா ராமசுந்தரம்
3. மஹேந்திரன்
4. ராதாகிருஷ்ணன்
5. ஜார்ஜ்

ஆகிய 5 பேர் பெயரை டிஜிபிக்கு பதவிக்கு தமிழக அரசு சிபாரிசு செய்துள்ளது. இதில் ஜாங்கிட், அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்வர்கள்.

அதேபோல் சென்னை கமிஷனராக இருந்த ஜார்ஜ் மீது குட்கா ஊழல் சம்பந்தமாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கே.பி. மகேந்திரனுக்கு வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி(கூடுதல் பொறுப்பு) டி.கே. ராஜேந்திரனின் பதவிக் காலம் ஜூன் 15-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இருப்பினும் உரிய விதிகளின் படி இம்மாதம் இறுதியில் அவர் ஓய்வு பெற உள்ளார்.