சென்னை:

செக் மோசடி வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் தண்டனை நிறுத்தி சென்னை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.

செக் மோசடி வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,அன்பரசுவுக்கு 2 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அன்பரசு,  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட், தண்டனையை நிறுத்திவைத்து உத்ரவு பிறப்பித்தது. மேலும்  அன்பரசுவுக்கு ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டது.

கடந்த 2002ல் கல்வி நிறுவனத்தின் கட்டிடப் பணிகளுக்காக ரூ. 35 லட்சத்தை சவுகார்பேட்டை யைச்  சேர்ந்த முகுந்சந்த் போத்ரா என்பவரிடம் அன்பரசு கடனாக வாங்கினார்.

அதை திருப்பித்தர செக் கொடுத்தனர். அந்த செக் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அன்பரசு கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது.

இதையடுத்து, அன்பரசு உள்ளிட்டோர் மீது முகுந்த்சந்த் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் 8வது பெருநகர மாஜிஸ்திரேட், அன்பரசு, மணி, கமலா ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.