சென்னை,

திமுக எம்எல்ஏக்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து,  சிபிஐ விசாரிக்க கோரி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி, செய்தது. மேலும் இதுகுறித்து சிபிஐயை அணுகி புகார் தெரிவிக்கலாம் என்று தீர்ப்பில் கூறி உள்ளது.

எடப்பபாடி தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபிப்பதற்காக, அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் அழைத்துச்சென்று அடைத்து வைத்து பண பேரம் நடைபெற்றது.

இதுகுறித்த வீடியோ சமீபத்தில் டைம்ஸ் நவ் என்ற ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து முதல்வர்,சட்டமன்ற செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு கூறியிருந்தது. அதன்படி கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவகாரத்தினை சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு துறையினர்  விசாரிக்க முடியாது என்றும், இது சட்டப்பேரவை உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம். ஆகவே இரு அமைப்பினரையும் பிரதிவாதிகளாக சேர்க்கக்கூடாது என்றும் கூறி இருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மு.க.ஸ்டாலினின் சிபிஐ விசாரணை கோரும் மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், இதுகுறித்து சிபிஐயை அணுகி புகார் தெரிவிக்கலாம் என்று தீர்ப்பில் கூறி உள்ளது.