விழுப்புரம்,

விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேற்று நள்ளிரவு திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் பெட்டி முழுவதும் எரிந்தது.

தீ வைத்து எரிக்கப்பட்ட ரெயில் பெட்டி  விழுப்புரம்- காட்பாடி பயணிகள் ரெயிலின் பெட்டி என்றும், பூட்டப்பட்ட பெட்டியில் யாரோ மர்ம நபர்கள் புகுந்து தீ வைத்திருக்கலாம் என்றும் வேறு விதத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்று  தீயணைப்பு அதிகாரி கூறி உள்ளார்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டியை திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.