டெல்லி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகத்தினை சீர்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

வாரியத்தின் தற்காலிக செயலாளர் அமிதாப் சவுத்ரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு தனது அறிக்கையை அடுத்த 15 நாட்களில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.