சிவகாசி,

கூலிக்கு மாரடிப்பவர்தான் வைகை செல்வன் என்று தனது கட்சி பேச்சாளரையே அசிங்கப்படுத்தினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலில் கலப்படம் உள்ளது, தற்கொலை செய்வேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தற்போது அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள  சலசலப்பு காரணமாக பல்வேறு அணிகளாக பிரிந்து ஆலோ சனைகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் தனி அணியாகவும்,  தலித் எம்.எல்.ஏக்கள் தனி அணியாகவும், தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11 எம்.எல்.ஏக்கள் தனி அணியாகவும், டிடிவி தினகரனுக்கு ஒரு கோஷ்டி என 4 தனித்தனி அணிகள் எடப்பாடி அரசுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் முன்னணி பேச்சாளரான வைகை செல்வன் தலைமையில் மற்றொருஅணி உருவாகி உள்ளதாக  கூறப்படுகிறது. அவருடம்  அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை நடத்தி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்த கோஷ்டியின் ரகசிய ஆலோசனை தொடர்ந்து தொடருகிறது. அதிமுகவில் தங்களுக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என எடப்பாடியிடம் வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு,  500 ரூபாய் பணத்துக்காகப் பேசும் கூலிப் பேச்சாளர், கூலிக்காக மாரடிப்பவர் தான் இந்த வைகைச் செல்வன் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி காட்டமாக கூறினார்.

பாலில் கலப்படம் குறித்த சர்ச்சை குறித்து, தனியார் தொலைக்காட்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், “பாலில் ரசாயண கலப்படம் எனச் சொல்லிவிட்டு  நிரூபிக்கத் தவறியதால், தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதவி விலக வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.  “என் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியே வைகைச்செல்வனை இப்படிப் பேச வைத்திருக்கிறது. 500 ரூபாய் பணத்துக்காகப் பேசும் கூலிப் பேச்சாளர்தான் இவர், கூலிக்கு மாரடிக்கும் பேச்சாளர் வைகைச் செல்வன் என சரமாரியாக பேசி செய்தியாளர்களையே அசர வைத்தார்.

தனது கட்சி பேச்சாளரையே தரக்குறைவாக விமர்சித்த அமைச்சரின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.