மும்பை:
மகாராஷ்டிராவில் ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால், மாநில அரசானது வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். சிறு மற்றும் குறு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில் முதல்-மவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவை இன்று கூடியது. இதில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் செய்தியார்களிடம் கூறுகையில், ‘‘விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. ரூ.34 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.1.5 லட்சம் வரை விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாய கடன் தள்ளுபடிக்காக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
[youtube-feed feed=1]