புதுச்சேரி:
நெருநகரத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிகொண்டு சொகுசு வாழ்க்கைக்கு தான் பலரும் ஆசைப்ப டுவார்கள். ஆனால் இங்கு ஒரு இளம் ஜோடி இதற்கு நேர் மாறாக பெரு நகர வாழ்க்கையையும், கைநிறைய சம்பளம் பெற்ற வேலையையும் தூக்கி எறிந்துவிட்டு யானைகள் மறுவாழ்வு சேவையில் ஈடுபட் டுள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்தகள் ஸ்வேதா கோவிந்த் (வயது 30). இவரது கணவர் கோவிந்த் கோரூர் (வயது 37). இவர்கள் இங்கு கை நிறைய சம்பளம் கிடைத்த வேலையில் இருந்தனர். தற்போது இவர்கள் இயற்கை மற்றும் வன உயிரினங்களோடு ஒன்றி வாழ வேண்டும் என்ற தங்களது கனவை நிறைவேற்றுவதற்காக பணிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.
கோவிந்த் ஒரு நிறுவன மேலாளராகவும், ஸ்வேதா ஒரு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராகவும பணியாற்றி வந்தனர். மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் பெற்று வந்தனர்.

தற்போது இவர்கள் புதுச்சேரி அருகே மரக்கானத்தில் வசித்து யானைகள் மறுவாழ்வுக்காக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் இவர்கள் 6 யானைகளுக்கு கூடாரம் அமைத்து சேவை செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினர்.
தற்போது இவர்கள் சிறைச் சாலைகளில் வளர்க்கப்பட்டு மற்றும் புறக்கணிக்கப்பட்ட 3 யானைகளின் மறுவாழ்வு பணிக்கு தங்களை அர்ப்பணித்து கொண்டு அவற்றை பராமரித்து வருகின்றனர். தற்போது இருவரும் மாதம் ரூ. 25 ஆயிரம் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர்.
2012ம் ஆண்டில் இருவரும் மலையேற்ற ஆர்வலர்களாக இருந்தபோது சந்தித்துள்ளனர். பின்னர் இது காதலாக மாறி 2014ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இது குறித்து கோவிந்த் கூறுகையில், ‘‘அருகில் உள்ள கிராமங்களில் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இதற்கு குழந்தைகளை தயார் செய்கிறோம். அதோடு 120 மலைவாழ் குழ ந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.
[youtube-feed feed=1]