சென்னை:

எடப்பாடியை தொடர்ப்து ஓ.பன்னீர்செல்வமும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, மாநிலக் கட்சிகளிடம் பாஜ கேட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல்-வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.

‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க அம்மா அணி ஆதரவு அளிக்கும்’’ என்று முதல்வர் நேற்று அறிவித்தார். ஆதரவை நேரில் சென்று பிரதமரிடம் தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதேபோல் முன்னாள் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஆதரவு கேட்டதற்கு இணங்க பாரதீய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவளிப்பதாக ஓ.பன்னீர் செல்வமும் தெரிவித்தார். இதையடுத்து பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்க பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

தமிழகத்தில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை சேர்ந்தவர்களும் ஒரே நேரத்தில் டெல்லி புறப்பட்டு சென்றிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]