சென்னை,

நிலுவைத்தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ரூ. 2 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யயும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்க்கரை ஆலைகளின் நிலுவைத்தொகை ரூ2000 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கேட்டும், அரசு இதுவரை கண்டுகொள்ளாத நிலையில், வரும் 22-ம் தேதி தமிழக சட்ட  மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதையடுத்து இன்று சென்னை சேப்பாக்கத்தில் கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கரும்பு விவசாயிகள் சட்டமன்றத்தை முற்றுகையிட போவதாக கூறியிருப்ப தால்,ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]